Skip to main content

“சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
"Dictatorship is going on in India" - Minister I. Periyasamy

தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ளது. இதன் வேட்பாளராக மாவட்ட செயலாளர் சச்சிதானந்தத்தை தலைமை அறிவித்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

"Dictatorship is going on in India" - Minister I. Periyasamy

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வந்த சச்சிதானந்தத்தை மேள தாளங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்,எல்.ஏ. பாலபாரதி உட்பட கட்சி பொறுப்பாளருடன் வேட்பாளர் சச்சிதானந்தன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவுப் பொருள் வழங்க துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “எங்கள் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழ்நாட்டு மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இருக்கும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை வீழ்த்துவதற்கு இந்தியா என்ற கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெறும்.

"Dictatorship is going on in India" - Minister I. Periyasamy

திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவக் கொள்கையை கொண்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய வெற்றியை சச்சிதானந்தம் பெறுவார். அதுவும் வாக்கு எண்ணிக்கையின் போது காலை 9 மணிக்கு எல்லாம் அதிக வாக்கு எண்ணிக்கையில் சச்சிதானந்தம் முன்னணியில் இருப்பார். அது இந்திய அளவில் பேசப்படும். அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நாங்கள் வெற்றி பெறச் செய்வோம். நாளை கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் தேர்தல் பிரச்சாரமும் தொடங்கப்படும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்