dh

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், பாலா இயக்கத்தில் வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக தான் வாங்கிய மொத்த சம்பளத்தையும், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக வழங்கியிருக்கிறார் துருவ் விக்ரம்.

முதல் சம்பளத்தில் என்ன வாங்கினீர்கள்? என்ன செய்தீர்கள்? என்று எதிர்காலத்தில் எவரும் கேட்கையில், பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும்படி நல்ல காரியத்தை செய்திருக்கும் துருவ் விக்ரமிற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.