![Departed after EPS and arrived OPS](http://image.nakkheeran.in/cdn/farfuture/e9DKcnz0hYjykfHRDpVeaxFA-b19eHygZcg2qWNNr_s/1655960127/sites/default/files/inline-images/E52.jpg)
அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் வானகரம் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் வானகரம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புழல் -தாம்பரம் வெளிவட்ட சாலையிலிருந்து கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகியோரின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. வீட்டிலிருந்து முதலில் இபிஎஸ் புறப்பட்ட நிலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் கொண்டதால் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இபிஎஸ்க்கு பிறகு பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட ஓபிஎஸ் மாற்றுப்பாதை வழியாக முதலில் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார்.