



Published on 17/09/2021 | Edited on 17/09/2021
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்ய கோரியும், உபா சட்டத்தை திரும்ப பெறவும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.