
இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதாசாகேப் பால்கேவிருது' வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாமதமானாலும் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளவிருது வரவேற்புக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.''நண்பரும் தன்னிகரற்ற கலைஞராகவும் உள்ளசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.'தாதாசாகேப் பால்கேவிருது'ரஜினிக்கு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்றாலும் வரவேற்புக்குரியது. நடிப்புக்கும் நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினியின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர எனது வாழ்த்துகள்'' எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)