Skip to main content

தாமதமாகும் விமான சேவை; சிவப்பு மண்டலமானது 'மெரினா'

Published on 01/10/2024 | Edited on 01/10/2024
 delayed flight service; Red Zone is 'Marina'

சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் ஆறாம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வான் சாகச நிகழ்ச்சிகள் மெரினாவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கம் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும். இன்று பிற்பகல் 1:45 முதல் 3.15 வரை வான்தடம் மூடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அக்டோபர் 2, 3 ,5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விமான பயண அட்டவணைகளை சரி பார்த்து பயணிகள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மெரினாவில் நடத்தப்படும் வான்படை சாகசம் காரணமாக மெரினா பகுதி சிவப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்