Skip to main content

ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரைசா!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

DEFOMATION NOTICE ISSUED ACTRESS RAISA WITH DOCTOR

 

பிக்பாஸ் புகழ் நடிகையும், பிரபல மாடலுமான ரைசா, அடிக்கடி தனது முகத்திற்கு ஃபேசியல் சிகிச்சை செய்து, முகத்தைப் பொலிவுடன் வைத்திருப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் மருத்துவர் பைரவி அளித்த ஃபேசியல் சிகிச்சையால் நடிகை ரைசாவின் முகம் வீங்கியது. இதுகுறித்த புகைப்படத்தையும் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

 

இந்த நிலையில், மருத்துவர் பைரவியிடம் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரைசாவின் வழக்கறிஞர் மருத்துவருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் "முகப்பொலிவு சிகிச்சையைத் தவறாக செய்துள்ளார். ரூபாய் 1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகம் பொலிவு பெறாமல் ரத்தக்கசிவு, வீக்கம்தான் ஏற்பட்டது. தவறான சிகிச்சை காரணமாக முகம் வீங்கியதால் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். 15 நாளில் இழப்பீடு தராவிடில் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவர் பைரவி, “இந்த சிகிச்சையை இதற்கு முன் பலமுறை ரைசா எடுத்துள்ளார். அப்போதெல்லாம் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. தோல் சிகிச்சையின் அத்தனை தரவுகளையும் நன்கறிந்த ரைசா, எங்கள் கிளினிக் குறித்து அவதூறு பரப்புவதற்காகவே அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் எனது மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் நான் அனுபவித்த அவதூறு, மன வேதனை ஆகியவற்றுக்கு மன்னிப்பும் இழப்பீடும் கோருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.