Skip to main content

சூட்கேசில் பெண்ணின் உடல்; ஒருவர் கைது!

Published on 19/09/2024 | Edited on 19/09/2024
Deepa from Manali incident in Chennai Thoraipakkam

சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் ஒன்றாவது பிரதான சாலையோரம் உள்ள ஒரு இடத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தான் கட்டுமானப் பணிக்குச் சென்ற மாரி என்பவர் அப்பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த சூட்கேஸை போலீசார் திறந்து பார்த்த போது இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுத் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் உடலை சூட்கேஸில் அடைத்து  வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் மணலியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்கிற தீபா என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அதே சமயம் தீபா துரைப்பாக்கம் எதற்காக வந்தார். அல்லது அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் இங்குக் கொண்டு வரப்பட்டு மர்மநபர்கள் வீசி சென்றார்களா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதோடு அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாகச் சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் என்பரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.