Skip to main content

1000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு... குறையும் தினசரி உயிரிழப்பு!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

as


தமிழகம் முழுவதும் இன்று 1,192 பேருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 150 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 200க்கும் அதிகமான தொற்று பதிவாகி வந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 26,88,568 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,423 ஆக உள்ளது. இதன் மூலம் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,37,632 ஆக அதிகரித்துள்ளது.

 

நோய்த் தொற்று காரணமாக இன்று 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இதுவரை 35,912 பேர் கரோனா தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக தற்போது வரை 14,992 மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள்.  இன்று மட்டும் 1.49 லட்சம் கரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 5,06,03,749 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்று கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'நடமாடும் கருக்கலைப்பு மையமா?' - பெண் உட்பட 4 பேரிடம் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
nn

கடலூரில் நடமாடும் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாகப் போலீசார் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே சட்ட விரோதமாகக் கருக்கலைப்புகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் என்ற கிராமத்தில் நடமாடும் வகையில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. அந்தப் பகுதியில் உள்ள ஓம் சக்தி மெடிக்கலில் கருவில், இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என ஸ்கேன் மூலம் சட்ட விரோதமாகத் தெரியப்படுத்தப்படுவதாகவும் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் மற்றும் காவல்துறையினர் அந்த மெடிக்கலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படும் கருவி மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய மருந்துகள் ஆகியவை இருந்தன. மெடிக்கலின் உரிமையாளரான மணிவண்ணன் மற்றும் அந்த மெடிக்கலில் மருந்தாளுநராக பணிபுரிந்த கௌதமி, இடைத்தரகர்கள் தினேஷ், கண்ணதாசன் ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டுக்கே சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், நடமாடும் வகையில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதா என்பது தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.