Skip to main content

''சிவகங்கையை மருது பாண்டியர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்'' - மதுரை ஆதீனம் கோரிக்கை

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

 "Declare Sivagangai as Marutubandyar district" - Madurai Atheenam demand

 

வருடந்தோறும் சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவு தினம் சிறப்பாக அனுசரிக்கப்படும். 221-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மருது பாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் சில பகுதிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  சிவகங்கை, தேவக்கோட்டை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட ஆறு வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

இதனையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மருது பாண்டியர் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், மருது பாண்டியர் பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை. அவருடைய சமுதாயத்துக்காரர்களுக்குத் தெரிகிறதே ஒழிய இளைஞர்களுக்கு எதுவும் தெரியவில்லை. எனவே தமிழக அரசு மருது பாண்டியர்களின் வரலாற்றைப் பாடப் புத்தகத்தில் வைக்க வேண்டும். அதற்காகத் தபால் தலை வெளியிட வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை மருது பாண்டியர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டவிரோத கருக்கலைப்பு; ஓய்வு பெற்ற பெண் செவிலியர் கைது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
illegal abortion; Retired female nurse arrested

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஆவார். கடத்த ஐந்து ஆண்டுகளாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் பலருக்கு தெரிவித்து வந்த காந்திமதி, இதற்காக 20,000 பெற்றுக் கொண்டு கடந்த 5 வருடங்களாக கருக்கலைப்பிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மருத்துவத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அங்கு சென்ற நிலையில், நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக ஓய்வுபெற்ற செவிலியர் காந்திமதியை போலீசார் கைது செய்தனர்.

Next Story

கோர விபத்து; தந்தை, மகன் உயிரிழப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
claim accident; Son, father lose their live

சிவகங்கை மாவட்டம் கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையை சேர்ந்தவர் இக்னீசியஸ். இவர் தன்னுடைய 13 வயது மகள் ஜோனாத்தன் உடன் தேவகோட்டையில் இருந்து ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் கீரனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது இவர்கள் பயணித்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு காரும் பலத்த சேதமடைந்தது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே தந்தை இக்னீசியஸ், மகன் ஜோனாத்தன் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த ஆறு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.