Skip to main content

“முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, பின்னர் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முடிவெடுக்கலாம்”- தலைமை வழக்கறிஞர்! 

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

"Decisions can be made first for government school students and then for government aided school students" - Attorney General

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் முதலில் முடிவெடுக்கலாம் என்றும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையைப் பின்னர் முடிவெடுக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்குகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வுசெய்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு, 10 சதவீதத்திற்கும் குறையாமல் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்ததாகவும், அதனடிப்படையிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் பெற்று, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தது.

 

மேலும், இடஒதுக்கீட்டிலும் கூட நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என்றும்  குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (26.07.2021) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கலாம் என்றும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்கிய சட்டத்தை எதிர்த்த வழக்கில் முதலில் முடிவெடுக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த வழக்கில் விரிவாக வாதிட இருப்பதால், கால அவகாசம் வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை 6 வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்