Published on 24/09/2018 | Edited on 24/09/2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி நடக்கிறது. அதற்கு எடப்பாடி அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் அதையே கொள்கை முடிவாக எடுக்க மறுக்கிறது? ஆலையை மூட வேண்டும் என மக்கள் கோருவதற்கும் போராடுவதற்கும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.? பொய் வழக்கு போட்டு கைது செய்து ஏன் அச்சுறுத்துகிறது? என்ற கேள்விகளை எழுப்பியும், தமிழக அரசே! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுத்து சட்டமாக்கு! என்று வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவல்துறை அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.