The death of the wife of love... Baheer video released after 10 days

காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பத்து நாட்களுக்குப் பிறகு வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் செல்லப்பன் நகர்ப் பகுதியில் வசித்து வருபவர்கள் அஜய்-உமா தம்பதியினர். சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட உமா அஜய் இருவரும் தனியாக வசித்து வந்தனர். மகிழினி என்ற ஏழு மாத பெண் குழந்தை இவர்களுக்கு உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி அஜய் வீட்டிற்கு சென்ற பொழுது உமா ஒரு அறையில் துப்பட்டாவில் தூக்கிட்டு தொங்கியபடி கிடந்தார். இதனைக் கண்ட அதிர்ந்துபோன அஜய் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்த உமா அடுத்தநாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உயிரிழந்த பெண் உமாவின் செல்போனில் அவருடைய கணவர் அஜய் உருட்டு கட்டையால் உமாவை தாக்கும் வீடியோ காட்சிகள் ஒன்று இருந்தது. இதனை உமாவே வீடியோ பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது.

Advertisment

அந்த வீடியோ காட்சியில் கையில் உருட்டு கட்டையுடன் பேசும் அஜய், ''சத்தம் வரக்கூடாது... எந்திரி கிளம்பி போ... என்னென்ன வார்த்தை நீங்க கேட்டுருக்க... கிளம்பு எந்திரி... போயிடு... நீ சம்பாதித்து கொடுத்துதான் நான் வாழ்றேனா... நீ எங்கேயோ போய்சாவு... நீ தேவையில்லை...'' என கணவன் அஜய் மிரட்ட, உமா அழும் காட்சிகளும், கொடூரமாக அஜய் உருட்டு கட்டையால் உமாவை தாக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. உமா உயிரிழந்த பத்து நாட்களுக்குப் பிறகு வெளியான இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில்போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.