காதல் ஜோடியை கொன்று பெண் பிணத்தை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கிறது தேனி மாவட்ட நீதிமன்றம். தேனி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த தங்கநதி மகன் எழில்முதல்வன். இவர் கல்லூரியில் படித்து வந்தபோது முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் கஸ்தூரியை காதலித்து வந்தார். காதலர்களான இருவரும் கடந்த 2011ம் வருடம் சுருளிமலைப் பகுதியில் உடலில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
இதை ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதில் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர் தென்னை மரம் ஏறும் தொழிலாளி எப்பொழுதும் அரிவாளை வைத்திருப்பான் இந்த நிலையில் தான் சுருளிக்கு வந்த இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு கஸ்தூரி அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து சென்றதாக தெரிய வந்தது. இந்த பிரேத பரிசோதனையில் கஸ்தூரி இறந்தது திவாகர் கஸ்தூரியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வந்ததின் பேரில் திவாகர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்பதால் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட இருதரப்பு பெற்றோர்களும் முதல்வருக்கு அப்போது மனு அனுப்பினர். அதன் அடிப்படையில் 2011 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டிஎஸ்பி முத்துசந்திரலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். இதில் 67 சாட்சிகள் தயார் செய்யப்பட்டு உத்தமபாளையம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.
அதன் அடிப்படையில் இந்த வழக்கைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதனுடைய தீர்ப்பில் இரட்டை கொலை செய்த குற்றவாளி திவாகருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதியரசர் செந்தில்குமரேசன் தீர்ப்பளித்தார். அவர் மேலும் கூறியிருப்பதாவது... திவாகர், எழில்முதல்வனை கொலை செய்தவற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும், கஸ்தூரியை கொலை செய்தததற்கு தூக்கு தண்டனை, பலாத்காரம் செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000அபராதமும் நகையை கொள்ளை அடித்ததற்காக ஏழாண்டு சிறைத்தண்டனையும், ரூ.1000அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அதோடு இருதரப்பு பெற்றோருக்கும் தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் நீதிமன்றம் துவங்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இவ்வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.