கோப்புப்படம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு , நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி (41). இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மாடுகளை தனது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை மாட்டைப் பிடிக்கச் சென்றபோது 4 பசு மாடுகளில் ஒன்று பசுமாடு மாயமாகி இருந்தது. பின்னர் நேற்று காலை மீண்டும் தேடிய போது அங்குள்ள ஓடையை ஒட்டி பசு மாடு மர்ம விலங்கால் கடிபட்டு இறந்து கிடந்தது. இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு நாகமணி தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை இறந்த பசு மாட்டினை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதிவாகி இருந்த கால் தடைகளை வைத்து பசுமாட்டை அடித்துக் கொன்றது புலி என வனத்துறையினர் தெரிவித்தனர். புலி பசு மாட்டை அடித்துக் கொன்ற சம்பாதித்தால் அங்குள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.