
திருச்சி அருகே முதியவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் செத்த பல்லி மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில். அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் இன்று காலை தரிசனம் செய்வதற்காக வயதான முதியவர் ஒருவர் கோயிலுக்கு வந்துள்ளார். சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற அவர் தாகம் எடுக்கவே 'ஆசை' என்ற பெயருடன் விற்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை வாங்கியுள்ளார். தாகம் அதிகரிக்கவே அந்த பாட்டிலை திறந்து குடிக்க அவர் முயன்றுள்ளார். அப்போது அதில் செத்த பல்லி மிதந்ததை பார்த்தும் அவர் ஷாக் ஆகியுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் அவர் காட்டவே, அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்க கூறியுள்ளனர். ஆனால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு தானே புலம்பியபடி அங்கிருந்து சென்றார்.