Skip to main content

“என் ஆசை எல்லாமே...” - கடிதம் எழுதி உயிரை மாய்த்துக்கொண்ட 16 வயது சிறுமி

 

A daughter who made a tragic decision due to her father's mistake

 

தனது தந்தை குடிப் பழக்கத்திற்கு அடிமையானதைத் தாங்கிக் கொள்ள முடியாத 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். தந்தை குடிக்கு அடிமையானதால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் அடிக்கடி இதனால் பிரச்சனை ஏற்பட்டதால் மகள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், “என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தணும். என்  குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போது தான் என் ஆத்மா சாந்தி அடையும். நன்றி. இப்படிக்கு பி.விஷ்ணு பிரியா” என எழுதியுள்ளார். தந்தையின் தவறுக்கு மகள் தன் உயிரை விட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனது 10 ஆம் வகுப்பில் 410 மதிப்பெண்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.