பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் மத்திய அரசும், பாஜகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 8ம் தேதி நடக்க உள்ளதாகவும் இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த தேதி திடீரென மாற்றப்பட்டு 8 ஆம் தேதிக்கு பதிலாக 11 ஆம் தேதி அமித்ஷா தமிழக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.