இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவரது சமூக சேவையை பாராட்டி, மலேசியாவில் உள்ள, புகழ் பெற்ற ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
லைக்கா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், மக்களின் பயன்பாட்டுற்கான பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அவரது சேவை பல்வேறு நாடுகளின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
இலங்கையின் வட கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்களுக்கு குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடி நீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என எண்ணிலடங்காத சமூக சேவைகளை செய்து வருகிறார், சுபாஷ்கரன். அவருடைய சமூக சேவையை பாராட்டி, மலேசிய ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பேசிய மலேசிய துணை முதல்வர், சுபாஷ்கரனை பார்த்து வியப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா துறையிலும் லைக்கா நிறுவனம் கால்பதித்து, பல ஆண்டுகளாகிறது. தென்னிந்தியாவில் பல படங்களை தயாரித்து வருகிறது. ரஜினி நடிப்பில் உருவான 2.0, விரைவில் வெளிவர உள்ள ரஜினியின் தர்பார் உள்பட பல படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.