
வங்கக் கடலில் உருவாகி வங்க தேசம் சென்றுள்ள உம்பன் புயலின் காரணமாக 17 ந் தேதி இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடுமையான சூறைக்காற்று வீசீயதில் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சாய்ந்து நாசமானது. ஆலங்குடி தொகுதியில் அதிகமான சேதம் ஏற்பட்டு விசாயிகள் கண்ணீருடன் உள்ளனர்.

இந்தநிலையில் ஆலங்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் கொத்தக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று காற்றில் சேதமடைந்த வாழைகளை பார்த்து விசாயிகளுக்கு ஆறுதல் கூறியதுடன் உரிய நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பதாக கூறினார்.தொடர்ந்து கூறும்போது, கஜா புயல் தாக்கத்தில் இருந்து இன்னு ம் மீளமுடியாத விவசாயிகளை உம்பன் புயல் காற்று மறுபடியும் முடக்கிவிட்டது. அதனால் விசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.