பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் பால்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் இன்று (15.05.2023) நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.