/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/commercial-gas-cylinder-file.jpg)
வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் 1,942 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 26 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1,942 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கானசிலிண்டர், இன்று முதல் (01.12.2023) 1,968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 918 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)