cylinder

கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலிருந்த தாய், மகள்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் வீட்டிலிருந்த தாய் ஜெயமணி(45), மகள்கள் தனுஷ்யா(18), பவித்ரா (13) ஆகிய 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடிப்பு சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது.

படுக்கையறையில் கேஸ் சிலிண்டர் இருக்கும் நிலையில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் கழிவறையில் இருக்கின்றன. ஜெயமணியின் கணவர் வீட்டில் இல்லாத நிலையில் சிலிண்டர் வெடித்த சம்பவம் விபத்தா? கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment