Cybercrime cops warn against sharing photos on social media

சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பகிர்வதைத்தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் வர்த்தகம், வேலை வாய்ப்பு, லோன் தருவது, கிரெடிட் கார்டு லிமிட் அதிகரித்து தருவது, தவறான பார்சல் அனுப்பி இருப்பது, பான் - ஆதார் கார்டை வங்கி கணக்கில் சேர்ப்பது, வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பித்தல், போலியான கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்வது, மலிவு விலையில் பொருட்கள், ஆன்லைனில் விற்பனை போன்ற எந்த வகையான சைபர் கிரைம் குற்றங்களிலும் பணத்தை இழக்க வேண்டாம்.

Advertisment

சமூக வலைத்தளங்களில் கிவ் - அப் போன்று வரும் லிங்கை கிளிக் செய்து யூசர் ஐடி மற்றும் ஓடிபி எண் பகிர்வது, சமூக வலைத்தளங்களில் தன் போட்டோவை அனைவரும் பார்க்கும்படி பொதுவாக பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மோசடியில் பணம் இழப்பு ஏற்பட்டவுடன் அல்லது 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.