Skip to main content

திருமணம் தாண்டிய உறவு; ஆண் நண்பருடன் மனைவி கைது 

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

cuddalore panruti lorry driver venkatesan incident

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 40). லாரி ஓட்டுநரான இவருக்கும் குள்ளஞ்சாவடி அருகில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்த சித்ராவிற்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தற்போது மூன்று பிள்ளைகளும் உள்ளனர். லாரி ஓட்டுநரான வெங்கடேசன் வேலை நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதால் வாரத்தில் சில நாட்கள் வெளியூர்களிலேயே அவரது பயணம் இருக்கும். அதன் பிறகு பணி முடிந்து அவ்வப்போது மனைவி பிள்ளைகளைப் பார்க்க வீட்டுக்கு வந்து செல்வது உண்டு. இந்நிலையில் சித்ரா தனது பிள்ளைகளுடன் தான் பிறந்த ஊரான தோப்புக்கொல்லை பகுதியில் தற்போது தங்கியிருந்துள்ளார்.

 

கடந்த 26 ஆம் தேதி மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வெங்கடேசன் தோப்புக்கொல்லை கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரது மனைவி சித்ரா, வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை எடுத்து கணவருக்கு கொடுத்துள்ளார். மனைவி கொடுத்த மதுவை குடித்த உடனே திடீரென மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வெங்கடேசன் தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் வெங்கடேசன் மது அருந்திய பின் திடீரென மயங்கி விழுந்ததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சித்ராவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்ரா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சண்முகம் என்ற ஆட்டோ டிரைவருக்கும் சித்ராவிற்கும் நீண்ட நாட்களாக திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்துள்ளது. இது அவரது கணவர் வெங்கடேசனுக்கு தெரியவந்து அவர் சித்ராவை கண்டித்துள்ளார். அதையும் மீறி சித்ரா சண்முகத்துடன் திருமணம் தாண்டிய உறவைத் தொடர்ந்துள்ளார்.

 

கணவர் உயிருடன் இருந்தால் தங்களது திருமணம் தாண்டிய உறவைத் தொடர முடியாது என்ற காரணத்தால் கணவனை தீர்த்துக்கட்ட சித்ராவும் அவரது  ஆண் நண்பரான சண்முகமும் முடிவு செய்துள்ளனர். அதன்படி வெங்கடேசனுக்கு மது பாட்டிலில் பூச்சி மருந்து கலந்த மதுவை கொடுத்துள்ளார் சித்ரா. வெங்கடேசனை திட்டமிட்டு தீர்த்துக்கட்ட விஷம் கலந்த மது கொடுத்ததை சித்ராவும் அவரது ஆண் நண்பர்  சண்முகமும்  ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

ஜிப்மர் மருத்துவமனையின் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து வழக்கு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Case against Jipmar Hospital's holiday notification

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவன்று அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளது. அந்த வகையில் புதுச்சேரி ஜிப்ம்ர் மருத்துவமனைக்கும் ஜனவரி 22 ஆம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.