Cuddalore incident information revealed in the investigation

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் - கமலேஸ்வரி தம்பதியினர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ஜோதி நகரில் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். இதில் சுரேஷ்குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி சர்க்கரை ஆலையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 70 வயதான நிலையில் வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.

Advertisment

இதனையடுத்து கமலேஸ்வரி அவரது மகன் சுகந்தகுமார், பேரன் இஷான் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதற்கிடையே சுகந்தகுமார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே அவர் மனைவி பிரிந்து சென்று விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். அதே சமயம் சுகந்தகுமார் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி செய்து வரும் நிலையில் 15 நாட்கள் அலுவலகத்திலும் 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

Cuddalore incident information revealed in the investigation

இத்தகைய சூழலில் தான் ஜூலை 15 ஆம் தேதி திங்கட்கிழமை வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து லேசாக புகை வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடல்களைக் கண்டு அதிர்ந்து போன போலீசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு அருகில் வசித்து வரும் சண்முகவேல் என்பவர்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக அதே பகுதியில் வசித்து வரும் சங்கர் ஆனந்த், சாகுல் ஹமீது ஆகிய இருவரும்கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

Cuddalore incident information revealed in the investigation

போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர் ஆனந்த் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் கடந்த 12ஆம் தேதி இரவு திட்டமிட்டு சுகந்தகுமார் வீட்டில் மறைந்திருந்து அவர்கள் வீட்டுக் கதவு திறந்து இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதன் பின்பு இரவு கதவைத் தட்டி சுகந்த குமார் வெளியே வரும்போது அவரை கத்தியால் வெட்டி தாக்கியுள்ளனர் மேலும் சுகந்த குமார் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்து உள்ளே நுழைந்த போது மேலும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அவரது தாய் 10 வயது குழந்தை என மூன்று பேரையும் வெட்டி கொலை செய்துள்ளனர். அதோடு நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அதே பகுதியில் மறைந்திருந்து மீண்டும் 14ஆம் தேதி இரவு வந்து கொலை செய்யப்பட்ட மூன்று பேரையும் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துவிட்டுச் சென்றதாக காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.