Skip to main content

 திலகவதியோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் -  வ.கவுதமன் பேட்டி! 

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் குடும்பத்தினரை சந்தித்து தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் வ.கௌதமன் ஆறுதல் கூறினார்.

 

v

 

பின்பு செய்தியாளர்களிடம் கவுதமன் பேசியபோது,   ‘’கல்லூரி மாணவி திலகவதி பச்சைப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழக மண்ணில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை கூடிக் கொண்டே இருக்கிறது. கல்லூரியில் படிக்க கூடிய பெண்கள் வகுப்பறையில் கொலை செய்யப்படுவதும்,  வீட்டுக்குள் புகுந்து கொலை செய்யப்படுவதும், ரத்தவெள்ளத்தில் மிதப்பதும் இந்த ஆட்சிக்கு படுதோல்வியைத் தான் இது கொடுத்திருக்கிறது.  இதுபோன்ற சம்பவங்கள் பெண்கல்விக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

 

 பெண்கள் படிக்கப்போவது பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் பள்ளி, கல்லூரி  படிக்கக்கூடிய பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.  இந்த வழக்கில் காவல்துறை மிக மோசமான நடவடிக்கையை பின்பற்றி இருக்கிறது. குற்றவாளி பேசிய வீடியோவை சமூகவலைதளத்தில் யார் விட்டது..? இவ்வழக்கை உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த காட்டுமிராண்டித்தனமான,   மனிதத்தன்மையற்ற செயலை யார் செய்திருந்தாலும்  அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும். 

 

g

 

இது மாதிரி கேடுகெட்ட படுபாதக கொலைகள் இந்த மண்ணில் நடந்து கொண்டே இருக்கிறது. இது திலகவதியோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வுடன் வாழ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடம் வைக்க வேண்டும்.  பிள்ளைகளிடத்தில் வன்முறை கூடாது, இது சரியானதல்ல என்று பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும். இதையெல்லாம் அரசு உடனடியாக செய்ய வேண்டும் .

 

திலகவதியின் குடும்பத்திற்கு உடனடியாக ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். திலகவதியை கொலை செய்தவர்  எந்த கட்சியாக, எந்த இனமாக,  எந்த சாதியாக இருந்தாலும் அவரை காப்பாற்ற நினைக்க கூடாது.  அவர்கள் கடுமையான மன்னிக்க முடியாத குற்றவாளி. இந்த காட்டுமிராண்டி செயலை செய்தது யாராக இருந்தாலும் தப்பிக்க விடக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இல்லாத பட்சத்தில் கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியது இருக்கும்.


காவல்துறை, நீதித்துறை,  அரசு தனது கடமையை சரியாக செய்யும்  என்று நம்புகிறோம். இல்லாத பட்சத்தில் அதற்கான எதிர்வினையை சந்திக்க வேண்டி இருக்கும்’’என்று தெரிவித்தார்.
  

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.