Skip to main content

ஊரடங்கு: கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் பலி! தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 பேர்!

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன்(55), மாயகிருஷ்ணன்( 50), எழில் வாணன் (35), ரவி (38) ஆகிய நால்வரும் குள்ளஞ்சாவடி பகுதியில் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை வாங்கிவந்து குடித்துள்ளனர்.  சாராயம் குடித்த கொஞ்ச நேரத்தில் சந்திரகாசன் வாந்தி எடுத்து  பலியாகியுள்ளார். பின்னர் மயங்கி கிடந்த மாயகிருஷ்ணன், எழில்வாணன்,  ரவி ஆகியோரை அருகிலிருந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  இதில் எழில்வாணன், மாயகிருஷ்ணன் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

 Cuddalore - Counterfeit liquor issueரவி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆணையம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரும் கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில், கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் கள்ளச்சாராயம் விற்றது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
 

nakkheeran appகரோனா தொற்றால் ஊரடங்கு நேரத்தில், அரசின் மதுபானக் கடைகள் மூடி உள்ளதால் பல இடங்களில் குடி பிரியர்கள் சிலர் சேவிங் லோசன், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை குடித்து உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் சில இளைஞர்கள் ஒன்றாக இணைந்து யூடியூப் மூலம் சாராயம் காய்ச்சுவதை பார்த்து வீடுகளில் குக்கர் மூலம் சாராயம் காய்ச்சி குடித்து வருகிறார்கள். இந்தநிலையில் திங்கட்கிழமையன்று சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி கிராமத்தில் நான்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து வீட்டில் குக்கர் மூலம் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த அண்ணாமலைநகர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

 கள்ளச்சாராய ஒழிப்பு மசோதா; ஆளுநர் ஒப்புதல்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Tamil Nadu Governor approves  illicit liquor  Bill

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கள்ளச்சாராய மரணத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து கண்டம் தெரிவித்தனர்.

இந்தப் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கடந்த மாதம் 20 ஆம் தேதி தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கூடியது. அதில் மதுவிலக்கு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 இல் திருத்தம் செய்து, கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. பின்பு வாக்கு எடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கு மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். 

Next Story

படுஜோராக நடக்கும் மதுபாட்டில் விற்பனை; சர்ச்சையை கிளப்பும் கள்ளச்சந்தை  விவகாரம்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Liquor bottles are sold in the black market in Tirupur district

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை அடுத்து அதனை ஒடுக்கும் நடவடிக்கையாக, போதைப்பொருள் தடுப்பு வேட்டையில், போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் ஆங்காங்கே கைது சம்பவங்களும், போதைப் பொருட்கள் பறிமுதல்களும் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது குறைந்தபாடில்லை. அரசு மதுபாட்டிலைவிட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், கிராமப் புறங்களில் இருக்கும் குடிமகன்கள் இரு சக்கர வாகனங்கள் மூலம் கள்ளச் சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுகின்றனர். கள்ளச்சாராயம் மிகவும் குறைந்த விலை என்பதால் ஏராளமான இளைஞர்களும் சாராயம் குடிக்கத் தொடங்கினர். இதனால் திறந்தவெளி பகுதியில் பட்டப்பகல் நேரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதும் அந்த சாராயத்தை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

ஆனால், கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடக்கும் சாராய விற்பனைகள் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. இதை தடுத்தாலும் மறுபுறம் அரசு டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்று அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் நடக்கும் இந்த மதுபான விற்பனை சுற்றுவட்டார பகுதிகளில் படுஜோராக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை தவிர அந்த பகுதியில் வேறு எந்த கடைகளும் இல்லாததால் அங்கு ஏராளமான சந்துக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தகவலை தெரிந்துகொண்ட மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஒரு சில சந்துக்கடைகளில் உள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்து பெயர் அளவிற்கு கைது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கூலிப்பாளையம் நால்ரோடு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அதிகாலை நேரத்திலும் நள்ளிரவு நேரத்திலும் மதுபாட்டில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  அதே வேளையில், இதனை கண்டும் காணாதபடி இருக்கும் உள்ளூர் காக்கிகள்.. விற்பனையாளர்களிடம் அதிகளவில் பணம் வாங்குகின்றனர். இதனிடையே, நால்ரோடு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை நேரத்தில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சந்தையில் விற்கப்படும்  மது வகைகளால்.. கள்ளச்சாரயத்தை போன்று பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக, விதிகளை மீறி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.