Skip to main content

தமிழக ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்; சிதம்பரத்தில் பரபரப்பு

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

cuddalore chidambaram cpi party against governor rn ravi black flag  

 

தமிழக ஆளுநரை கண்டித்து சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சீர்காழி சட்டநாதர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இன்று (23.05.2023) சாலை மார்க்கமாக கடலூர் வழியாகச் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கி செல்வதற்காக வருகை தந்தார். இதனையறிந்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் பி. துரை தலைமையில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வி. எம். சேகர், மாவட்ட துணைச் செயலாளர் கோபு, வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் தமிழக ஆளுநர் வருகையின்போது, நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்வதை நியாயப்படுத்தி பேசும் ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது ஆளுநரை கண்டித்து, 'சனாதனவாதியாக செயல்படும் ஆளுநரே' என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கருப்புக் கொடி போராட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நாகாலாந்து, அஸ்ஸாம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசிய ஆளுநர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

நாகாலாந்து தினம் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் கொண்டாடப்பட்டது. இதில், நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் மக்களின் பாரம்பரிய நடனமான நாகா வாரியர்ஸ் நடனம் மற்றும் பிஹு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசியதாவது; “தமிழ்நாடு அதிலும் குறிப்பாக சென்னை, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பெண் குழந்தைகள் சென்னையில் படிக்கிறார்கள் என சொல்லும்போது அவர்கள் சிறிதும் கவலை இன்றி இருப்பதை அவர்கள் பேச்சில் என்னால் உணர முடிகிறது” என்று பேசினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தென்பெண்ணை ஆற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

MLA Ayyappan inspects the work of construction of retaining wall in Thenpennai river

 

மழைக்காலங்களில் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது கடலூர் பகுதியில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீரை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

 

அந்த கோரிக்கையை பரிசளித்த முதல்வர் தென்பெண்ணை ஆற்றில் கரைப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றின் கரையில் 16 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

இந்த பணியை சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை தரமாகவும் தொய்வின்றி விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கம்மியம் பேட்டை சாவடி அருகில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் அமைக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்றும், கடலூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் விடுபட்ட பாதாள சாக்கடை திட்டத்தை ரூ.220 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை துணை கோட்ட பொறியாளர் வீரப்பன், உதவி கோட்ட பொறியாளர் மணிவேல், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கர்ணன், கீர்த்தனா, ஆறுமுகம், சுமதி, ரங்கநாதன், சரத் தினகரன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்