The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

Advertisment

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீதுஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.