Published on 28/11/2021 | Edited on 28/11/2021

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை விட்டுவிட்டு தொடர்ச்சியாகப் பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ள நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் சாலையில் முதலை வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த வீடியோ முற்றிலும் போலியானது எனச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். எனவே பொதுமக்கள் இதுபோன்ற வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.