Skip to main content

கிராமத்தையே அலறவிட்ட முதலை; போராடி பிடித்த வனத்துறை

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

A crocodile entered the village; People screamed and ran

 

சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று இருந்துள்ளது. அப்போது குளத்திற்குச் சென்ற பொதுமக்கள் முதலையைப் பார்த்து அலறி அடித்து ஓடினர்.

 

பின்னர் இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்ததின் பெயரில், சிதம்பரம் வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாகப் போராடி முதலையைப் பிடித்தனர். பின்னர் சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். இந்த முதலை 9 அடி நீளமும் 155 கிலோ எடையும் கொண்டது என வனத்துறையினர் கூறுகின்றனர். முதலையைப் பிடித்த பிறகே அப்பகுதியில் உள்ள மக்கள் நிம்மதி அடைந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்