Cracks in the rails! Train crashes near Trichy

திருச்சி - மதுரை வழியாக, திருச்சி ஜங்ஷன் பகுதியிலிருந்து பொன்மலை ரயில்வே பணிமனைக்கு 13 பழுதடைந்த வேகன்கள் புறப்பட்டுச் சென்றன. புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மூன்றாவது வேகன் வழித்தடத்திலிருந்து கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.

Advertisment

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவ்வேகனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பாதையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சீரமைக்கும் பணிசுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. வழக்கமாக இந்த வழித்தடத்தைக் கடந்துசெல்லும் குருவாயூர் விரைவு ரயில், சரியான நேரத்திற்குப் புறப்பட்டு மிகப் பொறுமையாக கடந்து சென்றது.

Advertisment