Skip to main content

நடப்பது மோடி ஆட்சி அல்ல ஹிட்லரின் ஆட்சி - சிபிஎம் போராட்டத்தில் தலைவர்கள் பேச்சு! 

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

குடியுரிமை சட்டத் திருத்தச் மசோதாவை எதிர்த்து சிபிஐ (எம்) சார்பில் தோழமைக் கட்சிகள் பங்கேற்கும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.

 

cpm


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ். பாரதி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ எம்.பி., விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோபண்ணா,மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கே.எம். ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேரா. காதர் மொய்தீன், இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், ஆர். வைகை, மூத்த ஊடகவியலாளர் திரு. ஜென். ராம், சமூக செயல்பாட்டாளர் பேரா. அ. மார்க்ஸ், ஃப்ரண்ட்லைன் ஆசிரியர், ஆர். விஜயசங்கர், கல்வியாளர் தாவூத் மியாகான் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தர்ராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

cpm



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ஆர்ப்பாட்டம் நடத்த கூட தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற நிலை தற்போது உள்ளது. இந்த போராட்டம் தீர்வு காணும் வரை ஒரு தொடர் போராட்டமாக நடைபெறும். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 19 ஆம் தேதி நாடுமுழுவதும் போராட்டம் நடத்த இடதுசாரிகள் முடிவு எடுத்து உள்ளது. எனவே இது ஒரு தொடர் போராட்டமாக இருக்கும். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி மத்தியில் ஆட்சியிலும் எதற்கும் கை தூக்குகிற கைக்கூலிகளாக இங்கு இருக்கிற அதிமுக ஆட்சி உள்ளது.

மோடி ஆட்சி அல்ல ஹிட்லரின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அமித்ஷா ஒரு கோயபெஸ் ஆக இருக்கிறார். ஹிட்லர்க்கு உதவியாக இருந்தவர். ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு மோடிக்கு ஏற்பட கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாமல் மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 சதவீதம் மக்கள் பாஜகவுக்கு எதிராகதான் இருக்கிறார்கள். பாஜகவின் பினாமி கட்சியாக மாநிலத்தில் இருக்க கூடிய அதிமுக ஆட்சி உள்ளது.

நாடு படிப்படியாக ராணுவமாக மாறி வருகிறது. டெல்லியில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் ஏதும் செய்யவில்லை அனைத்து காவல்துறை செயத்தது அமித்ஷாவிற்கு கட்டுப்பட்ட காவல்துறை இன்று டெல்லியை கைப்பற்றி உள்ளது. தேசம் காப்பாற்ற பட வேண்டும், அரசியல் அமைப்பு சட்டம் காப்பாற்ற பட வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

 

cpm

 

ஜவாஹிருல்லா பேசுகையில், அம்மா ஆட்சி என்று சொல்லக்கூடிய எடப்பாடி ஆட்சி,மற்றும் பாமக கட்சியும் சேர்ந்து தமிழர்கள் முதுகில் குத்துகிறார்கள். மோடி ஆட்சி பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பு இல்லாமை போன்ற திட்டங்களில் இருந்து திசை திருப்பும் முயற்சியில் மோடி அவர்கள் செயல்பட்டு வருகிறார். இதற்கு உதவியாக இருந்த அதிமுகவை கண்டித்து முதல்வர், மற்றும் துணை முதல்வர், வீட்டை வரும் 18 ஆம் தேதி முற்றுகை இட உள்ளோம். அமித்ஷா அவர்களின் அப்பனையும் பார்த்த சமுதாயம் நாங்கள் என்றார். 

விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், 


 

cpm

 

இவர்கள் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலே முஸ்லீம்களுக்கு எதிரான செயல்களை செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த குடியுரிமை திருத்த சட்டம் வெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கக்கி கொண்டு இருக்கிறது. வெளிப்படையாக இஸ்லாமியர்களை மிரட்டி வருகிறது இந்த அரசு. இவர்கள் நிறைவேற்றிய அனைத்து திட்டங்களும் சன்பரிவார் அமைப்புகளின் கனவாகும். இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை இல்லை என்பதை அவர்கள் தெளிவாக நிறைவேற்றி உள்ளார்கள்.

ஈழத்தில் இருந்தும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்துள்ளார்கள். ஆனால் மோடிக்கும், அமித்ஷாவின் கண்களுக்கு தெரியவில்லை. இந்த சட்டம் மதவாத அடிப்படையில் இயற்றப்பட்டுள்ளது. மோடி கும்பலுக்கு இந்த அரசமைப்பு சட்டத்தை மதிக்க அவசியம் இல்லை. சாதி அடிப்படையில் சிந்தித்தவர் அம்பேத்கர் அல்ல சாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்தித்தவர். அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்வதுதான் அவர்களின் திட்டமாக உள்ளது. இந்தியா முழுவதும் அணிதிரண்டு போராட வேண்டிய நிலைமை உள்ளது.

நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராடாவிட்டால் சனாதன அமைப்புகள் ஆட்சி இங்கு மேலோங்கி நிற்கக்கூடும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார். 
 

cpm


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், இந்திய குடியுரிமை சட்டம் 64 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்டு திருத்த சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்திருந்தால் அந்த சட்டம் இன்று நிறைவேறி இருக்காது. வரலாற்றின் உண்மைகளை மறைத்து வைக்கவும் முடியாது, திருத்திவைக்கவும் முடியாது. அமித்ஷா என்னை பற்றி முழுமையாக அறியாதவர்.

பாராளுமன்றத்தில் பாஜகவை பொறுத்தவரை எந்த கொள்கைக்கும் மாறாக நாங்கள் முடிவு எடுத்தது கிடையாது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை அமித்ஷா கூறினார்.

காஷ்மீருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு இந்தியாவிற்கு ஏற்படவில்லை, ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்டு விட்டது. அடுக்கடுக்காக ஆபத்துகள் வரும்போது தான் அதனுடைய தாக்கம் நமக்கு தெரிகிறது. ஒரே நாடாக இருக்க வேண்டும் என்றால் இந்த திட்டம் தடுக்கப்பட வேண்டும். டெல்லி பல்கலை மாணவர்கள் போர்க்களம் புகுந்து விட்டார்கள். தமிழ்நாட்டிலும் மாணவர்கள் போராட ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் கட்சிகள் வர வேண்டாம் என்று கேட்டு கொண்டார்கள் நல்லது மணவர்களாக போராடட்டும் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்