Skip to main content

பத்மாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

Published on 23/12/2018 | Edited on 23/12/2018
ச்

 

’’மதுரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பத்மா என்பவர், ஊத்தங்கரையில் ஆயுதப்பயிற்சி வழங்குவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 23 பேருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். இவர் மோசமான இதய நோயினால் பாதிக்கப்பட்டவர். வழக்கு விசாணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக காரணத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இம்மாதம் 7ம் தேதி நீதிமன்றத்தில்  சரணடைந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

சிறையில் இவருக்கு இதய நோய் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டு திரும்பவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண் என்றும் பாராமல் இதய நோயாளியான பத்மாவை உயிருக்கு ஆபத்தான நிலையிலும் உரிய சிக்சை அளிக்காமல்  சிறைக்கும் மருத்துவமனைக்கும் அலைக்கழிப்பது மனித உரிமை மீறிய செயலாகும். வழக்குகளின் தன்மை எப்படியிருந்தாலும் சிறையில் உள்ளவர்களது  உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

எனவே, இவருக்கு  உரிய மருத்துவ சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற தேவையான நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.’’என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுத்தியுள்ளார்.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

"அந்த சம்பவத்தை நினைச்சு ஒரு வாரம் பொறாமையா இருந்துச்சு" - பாலா

 

bala speech about mysskin work in vanangaan

 

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்'. ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் வழங்குகிறார். மேலும் பாடல்களுக்கு வரிகள் எழுதி இசையமைப்பாளராக இந்த படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

 

அப்போது பாலா பேசுகையில், "இளையராஜாவை பற்றி மிஷ்கின் சொல்லிக்கிட்டே இருந்தார். ஆனால் இளையராஜாவும் மிஷ்கினை பற்றி என்னிடம் சொன்னதும் உண்டு. அப்போது மிஷ்கினின் படம் ரிலீஸானது தெரியாது. நான் என்னோட படத்திற்காக இளையராஜாவிடம் சென்றிருந்தேன். அப்போது ஷார்ட்ஸ், டி-ஷர்ட் போட்டு, சம்மந்தமே இல்லாமல் ஷூ போட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு உருவம் போய்க்கொண்டிருந்தது. அந்த உருவம் போனதுக்கு பிறகு இளையராஜாவிடம் கேட்டேன். யார் அது? பேரு மிஷ்கின், அவனை பத்தி சாதாரணமா எடை போட்டுடாத... பெரிய இன்டலெக்சுவல் என்றார். 

 

அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியாது. ஆனால் மிஷ்கினிடம் நெருங்கி பழகினதுக்கு பிறகு தான் தெரியுது, அது உண்மை என்று. ஒரு டெவில், இன்னொரு டெவிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய பெயரையே வோல்ஃப்-ன்னு (Wolf) தான் என் ஃபோனில் சேவ் பண்ணி வச்சிருக்கேன். ஓநாய் என்று அர்த்தம். நிறைய பேச வேண்டி இருக்கு. அடுத்தடுத்து மேடைகளில் பேசுவோம்" என்றார். 

 

உடனே பேசிய மிஷ்கின், "நான் 2 டைரக்டர் கிட்ட அசிஸ்டண்டா வேலை பாத்திருக்கேன். பத்து படம் பண்ணிட்டு இப்போது பாலாவுடைய வணங்கான் படத்தில் அசிஸ்டன்ட்டா வேலை பார்த்திருக்கிறேன். அந்த பெருமையை எனக்கு கொடுத்த பாலாவிற்கு நன்றி" என்றார். பின்பு பேசிய பாலா, "அசிஸ்டண்ட் டைரக்டரா மட்டும் இல்லை. டைரக்டராகவே ஒர்க் பண்ணிருக்கான். ஒரு சீன் நடிச்சான். அதை நீயே கம்போஸ் பண்ணிடு என்றேன். வித்தியாசமான கம்போசிங். ஷாட் முடிந்ததும் ஓகே என்றேன். வேகமா பக்கத்துல ஓடி வந்து, 'இன்னொரு தடவ பாத்திட்டு செக் பண்ணிட்டு ஓகே சொல்லுங்க...' என்றான். திரும்ப பார்த்தேன், 'நல்லதானடா இருக்கு' என்றேன். 

 

அந்த ஷாட் நீளமான ஒன்னு. 20 பேர் இருப்பாங்க. அதில் மிஷ்கின் கையை கட்டிக்கிட்டு கீழே குனிஞ்சு நிக்கணும். ஷாட் முடிந்ததும், என்னிடம் வந்து அதில் ஒரு பொண்ணு மட்டும் லேசா கண்ணு அசைச்சுருக்கு. கேமராவை பார்க்கிற மாதிரி இருக்கு என்றான். குனிஞ்சு தானே நிக்க சொன்னோம்... எப்படி அதை கவனிச்சான் என பார்த்தால், கீழே குனிஞ்சுக்கிட்டே யார் யார் என்ன பண்ணுறாங்க என்பதை பார்த்திருக்கிறான். அப்படி ஒரு ஷார்ப்பான ஆளு மிஷ்கின். அந்த சம்பவத்தை நினைச்சு ஒரு வாரம் பொறாமையா இருந்துச்சு. மிஷ்கினுக்கு முன்னாடி நாம ஒண்ணுமே இல்ல என தோணுச்சு" என்றார்.   

 


 

Next Story

“இதுவரை 125 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன” - அடுத்த ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா

 

actor bala helped his 4th ambulance

 

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பாலா. அவர் சம்பாதித்த நிதியில் தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் 4வது ஆம்புலன்ஸை உணர்வுகள் அறக்கட்டளையிடம் வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது என்னுடைய 4வது ஆம்புலன்ஸ். அறந்தாங்கி, குன்றி, சோலைகனை கிராமத்தை தொடர்ந்து இந்த அம்புலன்ஸ் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு கொடுத்துள்ளோம். சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் சாலையோர மக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு தாய் மக்கள். ஒரு மனிதன் பிறக்கும் பொழுது சந்தோஷமாக பிறக்க வேண்டும். ஆனால் இறந்து போகும்போது நிம்மதியாக போக வேண்டும். அவர்களுக்கு எந்த விதமான தொல்லையும் இருக்கக் கூடாது என நினைத்தேன். 

 

நிறைய பேர் என்னிடம் கார் இல்லையே, நிகழ்ச்சிக்கு போக வேண்டுமானால் கூட நண்பர்கள் காரில் தான் போக வேண்டியுள்ளதாகச் சொன்னார்கள். அந்த மாதிரி காரை வாங்கிவிட்டு சாலையோரம் போறதுக்கு, சாலையோரம் இருக்கும் மக்கள் இந்த ஆம்புலன்சில் போனார்கள் என்றால் ஃப்ரண்ட்ஸ் காரில் போவது போல் இல்லை பென்ஸ் காரில் போவது போல் இருக்கும் என்று சொன்னேன். ஒடுக்கப்பட்ட மக்கள் என சொல்லப்படுபவர்களைத் தொடுவது அவமானம் என்கிறார்கள். அவங்களுக்கு உதவி செய்வது அவமானம் கிடையாது. மனிதாபிமானம். இந்த மாதிரி ரொம்ப கருத்தாக எனக்கு பேச தெரியாது. இருந்தாலும் எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன். எல்லாருமே ஒரு தாய் மக்கள், எல்லாருமே தமிழ்நாட்டு மக்கள். 125 நாளில் 4 ஆம்புலன்ஸ் கொடுத்திருக்கிறேன். என்னுடைய சக்திக்கு மீறின ஒரு விஷயம். இதுக்கப்புறமும் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். 

 

அடுத்ததாக 5வது ஆம்புலன்ஸ் பாலமலை கிராமத்திற்கு கொடுக்கவுள்ளேன். மொத்தம் 10 ஆம்புலன்ஸ் கொடுக்கப் போராடுகிறேன். யாருடைய ஃபண்டிலும் நான் பண்ணவில்லை. என்கிட்ட இருக்கிறதை வைத்து இந்த தொண்டு பண்ணுகிறேன். முதல் ஆம்புலன்ஸ் அப்பகுதியில் நல்ல படியாக போகிறது. இரண்டாவது ஆம்புலன்ஸ் குன்றியில் இதுவரை 125 பேர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. அந்த ஆம்புலன்சில் போன யாருமே இறக்கவில்லை. எல்லாருமே உயிர் பிழைச்சிருக்காங்க என்று நினைக்கும் போது அதைவிட ஒரு பெரிய விஷயம் இல்லை. அதில் மொத்தம் 20 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். மூன்றாவது ஆம்புலன்சினால் 26 பேர் பயனடைந்துள்ளார்கள். இதை விட ஒரு மெடல் கிடைக்குமா சந்தோசம் கிடைக்குமா என தெரியவில்லை. இதற்கு உதவி பண்ணுவதாக நிறைய பேர் கேட்டாங்க. இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேட்டார். அவர் செய்ய விரும்பினால் நேரடியாக செய்ய சொன்னோம்" என்றார்.