nn

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவைத் தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 300- க்கும் மேற்பட்டோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இரண்டாவதாக செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

 The court refuses to give the autopsy report to the parents... The mystery in the case of Smt.

இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி புஷ்பராணி ஜிப்மர் மருத்துவமனை ஸ்ரீமதி மரண விவகாரத்தில் நடத்திய பிரேதப் பரிசோதனை தொகுப்பை ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்களிடம் வழங்க மறுத்துவிட்டார். ஏற்கனவே உயர்நீதிமன்றம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை உட்பட மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தொடர்பான மூன்று பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை புகாரளித்தவர் தரப்பிடம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று ஜிப்மர் மருத்துவமனை சமர்ப்பித்த மூன்றாவது பிரேதப் பரிசோதனை அறிக்கையை தருவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை என விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். இதனால் ஸ்ரீமதி வழக்கில் மர்மம் இன்னும் நீடிக்கிறது. ஜிப்மர் கொடுத்த அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

Advertisment