Skip to main content

தம்பதி வெட்டிக் கொலை; சகோதரர்களுக்கு இரட்டை ஆயுள்

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

court has awarded double life to the brothers couple case

 

கரூர் அருகே தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் சகோதரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

 

கரூரை அடுத்த ராயனூர் தில்லை நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (37), ஏசி மெக்கானிக். இவர் மனைவி தீபிகா (29). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். ரெங்கநாதன் குடும்பத்துடன் மணவாடி அய்யம்பாளையத்தில் வசித்து வந்தார். ரெங்கநாதனின் சித்தி மகன்கள் பார்த்திபன் (26), கவுதம்(19), பிரவீன்(25). இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. அய்யம்பாளையத்தில் உள்ள ரெங்கநாதன் வீட்டுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி இரவு பார்த்திபன், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர். ரெங்கநாதனை பார்த்திபன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரெங்கநாதன் தலை மீது கவுதம் காஸ் சிலிண்டரை தூக்கிப் போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த தீபிகாவை, பிரவீன் அரிவாளால் வெட்டியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிவு செய்து பார்த்திபன், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பிரவீன் தலைமறைவானார். கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் இன்று வழங்கிய தீர்ப்பில், பார்த்திபன், கவுதம் ஆகிய இருவருக்கும் தலா இரு இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும், தலா ரூ.31,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்