Skip to main content

பெற்றோர் கண்டிப்பு: கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018
lov


 

 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (24). தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுகன்யா (20) என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்தநிலையில் ரஞ்சித்குமார் அதே தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் மஞ்சுளா (18) என்ற பெண்ணை கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மஞ்சுளா திருமணம் ஆன நபரை காதலித்து அவரின் பின்னால் சுற்றி வருவதை அறிந்த அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

நேற்று மீண்டும் மஞ்சுளாவின் குடும்பத்தில் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் மனவேதனை அடைந்த மஞ்சுளா தன்னுடைய அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த ரஞ்சித்குமார் பாக்குப்பேட்டை ஏரியில் உள்ள மாந்தோப்பில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளா, ரஞ்சித்குமார் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்