Skip to main content

தங்கு தடையின்றி விற்பனையாகும் கள்ள மது; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Counterfeit alcohol sold without restriction! People demand to take action!

 

அரசு மதுபானக்கடை அருகே சட்ட விரோதமாக 24 நேரமும் மதுபானம் விற்பனை செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரவு 10 மணியிலிருந்து மறுநாள் மதியம் 12 மணிவரை அரசு மதுபானக் கடை ஊழியர்கள் மற்றும் பார் நடத்துபவர்களும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசன்ய தெருவில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே இரவு பகல் என 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் காட்சிகளை மது அருந்தும் ஒருவரே எடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.  

 

Counterfeit alcohol sold without restriction! People demand to take action!

 

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் "சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்கிறார்கள்.

 

இது ஒருபுறம் இருக்க மயிலாடுதுறை நகரத்தின் பிரதான தெருக்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகம் பயன்படுத்துகின்ற பகுதிகளான கூறைநாடு மாமரத்து மேடை மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மகாதான தெரு பகுதிகளிலேயே அரசு மதுபானக்கடை அமைந்துள்ளது. குறிப்பாகக் கூறைநாடு மாமரத்து மேடை அருகில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளால் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கக்கூடிய பொதுமக்கள் அமர வேண்டிய இருக்கைகளில், அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளிலிருந்து நேரடியாக மதுபான பாட்டில்களை வாங்கி வந்து அங்கே அமர்ந்து குடித்துவிட்டு அலங்கோலமாகத் தூங்குகின்ற நிலையைப் பார்த்து கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் முகம் சுளிப்பதுடன் பேருந்துகளில் ஏறுவதற்கு முடியாமல் தவிப்பதையும் காண முடிகிறது.

 

‘பொதுமக்களுக்கு இடையூறாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் குடிகாரர்கள் அமர்ந்து குடிக்காத வண்ணம் தடுத்து நிறுத்தித் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்பதே மயிலாடுதுறை நகர மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.