அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் இலங்கைச்சேரி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். இலங்கைச்சேரியில் உள்ள ஒரு விவசாயிக்கு கடந்த 30 ஆம் தேதியில் இருந்து 5ஆம் தேதி வரை 36 தொழிலாளர்கள் வேலை செய்ததாக இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கணக்கு எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிக்கு புகார் சென்றது. அவர்கள் நேரடியாக சென்று விவசாய வேலை நடந்ததா என ஆய்வு செய்துள்ளார். அங்கு எந்த வேலைகளும் நடக்கவில்லை என்பது தெரிய வந்ததுடன், இதுதொடர்பான கணக்குகளை கேட்டுள்ளார். பின்னர் பொய் கணக்கு எழுதியது தெரிய வந்தது.
இதையடுத்து, ஒன்றிய பொறியாளர் சண்முக சுந்தரம், மேற்பார்வையாளர் சண்முகம், ஊராட்சி செயலாளர் அமர்தலிங்கம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் தேசிய ஊரக நூறுநாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொது மக்கள் பயன்படுத்தும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தது. பிரதமரின் உத்தரவுபடி தற்போது விவசாய பணிகளுக்கு நூறுநாள் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் பயன்படுத்தபட்டு வருகின்றனர். இந்த பணிகளிலும் அரசியல் பிரமுகர்கள் நுழைந்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.