தமிழகத்தில் கரோனாவின் 2ஆம் அலை கடுமையாக பரவி வருகிறது. இந்த நிலையில், சென்னை கொண்டித்தோப்பு ரத்தின முதலி தெருவில், 12 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அந்தப் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் தடுப்பு வளையம் வைத்து, கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.

Advertisment