தமிழகத்தில் கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான ஒத்திகை இரண்டாம் கட்டமாகத் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இன்று (08/01/2021) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 மாவட்டங்களில் நடந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 இடங்களிலும் இன்று (08/01/2021) ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாடு முழுவதும் இன்று (08/01/2021) 736 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா தடுப்பூசி ஒத்திகையில் என்னென்ன நடக்கும்?
ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு 100 தடுப்பூசிகளைப் போட எவ்வளவு நேரம் ஆகும் என ஒத்திகை பார்க்கப்படும். தடுப்பூசி ஒத்திகையில் காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும் அறை போன்றவை ஒத்திகைப் பார்க்கப்படும். கண்காணிப்பு அறைகளின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது உள்ளிட்டவைப் பற்றி ஒத்திகைப் பார்க்கப்படுகிறது.