Skip to main content

கரோனாவுக்காக கமல் எழுதியுள்ள பாடல் நாளை வெளியீடு!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


கரோனாவால் ஊரடங்கு ஏற்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எழுதிய பாடல் நாளை (23/04/2020) வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் எழுதிய 'அறிவும், அன்பும்' எனப் பெயரிடப்பட்டுள்ள பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
 


கமல்ஹாசனுடன் சங்கர் மகாதேவன், யுவன்சங்கர் ராஜா, அனிருத், தேவிஸ்ரீபிரசாத், ஸ்ருதிஹாசன் ஆகியோர் பாடியுள்ளனர். மானுட சமூகத்தின் மீது நம்பிக்கை, நல்லெண்ணத்தை விதைக்க 'அன்பும் அறிவும்' பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசை விமர்சித்து பா.ஜ.க.வினர் வெளியிட்ட பிரச்சார பாடலால் பரபரப்பு!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
The propaganda song released by the BJP criticizing the central government caused a stir

கேரளா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் கே.சுரேந்திரன். இவர் மாநிலம் முழுவதும், ‘கேரள பாதயாத்திரை’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலம் தழுவிய இந்த நடைபயணத்திற்காக கேரளா பா.ஜ.க சார்பில் ஒரு பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. 

அந்த பாடலில், ஊழல் நிறைந்த மத்திய அரசுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைக்கு விடுக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலை, கேரள பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் பகிரப்பட்டது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இடம்பெறும் இந்த பாடலை கேரள பா.ஜ.க வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, அந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.