coronavirus prevention lockdown additional relaxation chief minister mkstalin discussion

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்தும், கூடுதல் தளர்வுகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (20/08/2021) ஆலோசனை நடத்துகிறார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி. முனைவர் சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

கூட்டத்தில் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், கரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் கூறுகின்றன.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு கூடுதல் தளர்வுகளா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளா என்பது குறித்து முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு நாளையோ அல்லது நாளை மறுநாள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.