Skip to main content

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

coronavirus prevention complete lockdown chennai high court

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவை முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று (03/05/2021) அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், "தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நாளை (05/05/2021) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

 

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்