திண்டுக்கல்லில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு பாதுகாப்பான உடை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவு காரணமாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளைக் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாத வகையில் முற்றிலும் உடலை மறைக்கும் வகையில் பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்டுள்ள ஆடைகளை மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் காவல்துறையினருக்கு வழங்கினார்.
தொற்றுநோய் பரவாமல் இருக்க அனைவரும் அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி போட்டுக் கழுவ வேண்டும். எப்போதும் போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 10 போலீசாருக்குப் பாதுகாப்பு கவச ஆடைகள் வழங்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பு உடைகளை அணிந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.