Skip to main content

கரோனா சிகிச்சை... தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்- தமிழக அரசு அறிவிப்பு!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

coronavirus medical treatment for private hospital tn government


தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
 


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசு கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். எனவே லேசான அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 5,000 முதல் 7,500 வரை வசூலிக்கலாம். 

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களிடம் நாளொன்றுக்கு 15,000 வரை வசூலிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் அதிகபட்ச கட்டணங்களாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிமிருந்து வசூலிக்கக் கூடாது. கரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவர் பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும்." இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்