Computer operator

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினி இயக்குபவர்கள் தற்காலிக பணிநியமனம் செய்ய வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி்.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 13 கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது கரோனா பரவல் அதிகமாக உள்ளதாலும்,ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும்தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்த இயலாத நிலை உள்ளது. அதனால் முதலில் வெிளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

Advertisment