கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை தாராளமாக நிதி கேட்டு வேண்டுகோள் வைத்தனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம், திருச்சியின் தொழில் அதிபர்கள் பலர் நிவாரண நிதிகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக திருச்சியில் அறம் மக்கள் நல சங்கம் சார்பாக, அறம் மக்கள் நல சங்கத்தின் தலைவரும், மக்கள் இராஜ்யம் பத்திரிக்கையின் நிறுவனருமான டாக்டர். மக்கள் அரசர் சு. ராஜா திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ரூபாய் 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

உடன் பொதுச்செயலர் ரமேஷ்குமார் மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மாநில துணை தலைவர்கள் சாகுல் ஹமீது, இளங்கோவன், பால்ராஜ், மாநில பொருளாளர் பாபு, மாநில இணை செயலாளர் அறிவுமணி, பொது மேலாளர் கோவிந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நிறுவனர் டாக்டர் சு.ராஜா, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து திருச்சி, தஞ்சை, உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெளி மாநிலங்களிலும் அறம் நலம் சங்கம் சார்பில் உணவு, அரிசி ஆகியவைகள் கொடுத்து வருகிறோம். நலிவடைந்த மக்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.