



Published on 31/03/2020 | Edited on 31/03/2020
உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்றுநோயால் 170க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 1,251 பேர் பாதிக்கப்பட்டு 32 பேர் பலியாயிருக்கிறார்கள். வரலாறு காணாத வகையில் கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் தனிமைப்படுத்திக்கொள்ள ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கரோனா காய்ச்சலுக்கு சித்தா டாக்டர்கள் பரிந்துரைத்த கபசுரம் ஆயுர்வெதிக் மருந்தை வாங்க இன்று அரும்பாக்கம் பகுதிகளில் உள்ள சித்தா மருந்துக் கடைகளில் மக்கள் குவிந்தனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.